டில்லியில் நேற்று புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்ட 25 பேரில் 18 பேர் இந்த சபையில் கலந்து கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது

டில்லி


டில்லியில் நேற்று புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்ட 25 பேரில் 18 பேர் இந்த சபையில் கலந்து கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 2 பேர் வெளிநாட்டினர். சபையுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சுமார் 300 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.


 


வெளிப்படையான தோல்விகள்


* ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்னரே தப்லிக் ஜமாஅத் நிகழ்வு நிறுத்தப்பட்டது. அதற்கு முன்னர், மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* கொரோனா அறிகுறிகளை கண்டறிய வெளிநாட்டினரையும் பார்வையாளர்களையும் ஸ்கேன் செய்ய எதுவும் செய்யப்படவில்லை.
* நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள், பிற மாநிலங்களில் நோய்வாய்ப்பட்ட பின்னரும் எச்சரிக்கை விடப்படவில்லை.
* அப்பகுதியில் வசிப்பவர்களை ஸ்கேன் செய்ய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவில்லை