டெல்லி வன்முறை: காதலர் தினத்தன்று திருமணம்; 11 நாட்களில் மரணம்

"ஐந்து துப்பாக்கி குண்டுகள் அஷ்ஃபக்கின் உடலில் பாய்ந்தன. அவற்றில் மூன்று குண்டுகள் அவனது நெஞ்சில் பாய்ந்தன," என்று சலீம் பைக் தெரிவித்தார்.


முதலில் அல் ஹிந்த் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் உடற்கூறாய்வுக்காக ஜி.டி.பி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


எலக்ட்ரீசியனாக பணியாற்றும் அஷ்ஃபக் ஹுசேன் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை முஸ்தஃபாபாத் பகுதியில் நடந்த வன்முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அவரது தாய் தெரிவிக்கிறார்.


என் மருமகளுக்கு நான் என்ன பதில் சொல்வது, அவளின் எதிர்காலம் என்னாவது என்று அழுதுகொண்டே கேள்வி எழுப்புகிறார் ஹஸ்ரா.


அவரது கேள்விக்கு அங்கிருந்த யாரிடமும் பதிலில்லை.


'ஒரே நிமிடத்தில் பல்லாண்டு நட்பை மறந்துவிட்டனர்'


டெல்லியில் உள்ள வடக்கு கோண்டா பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் பிப்ரவரி 24ஆம் தேதி, திங்கள் கிழமை இரவு அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டார்.